இந்த புகைப்படத்தில் இருக்கும் சென்சேஷனல் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க
வைரல் புகைப்படம்
திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது தென்னிந்திய அளவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் கதாநாயகியின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.
இவர் தான்
இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என கேட்டு ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார். அவர் வேறு யாருமில்லை மலையாள நடிகை மமிதா பைஜூ தான்.
ஆம், ப்ரேமலு படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ள நடிகை மமிதா பைஜூவின் சிறு வயது புகைப்படம் தான் இணையத்தில் உலா வருகிறது. இந்த சிறு வயது புகைப்படத்தில் அவருடன் இருப்பது, அவருடைய சகோதரர் ஆவார்.
மமிதா பைஜூ தமிழில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ரெபல் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இதை தொடர்ந்து ராம் குமார் - விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகி வரும் படத்திலும் மமிதா தான் கதாநாயகி என தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
