சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சென்சேஷன் நடிகை.. யார் தெரியுமா
சிவகார்த்திகேயன் தற்போது டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்கு பின் கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது படத்தில நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இப்படத்தில் அறிவிப்பை பிக் பாஸ் 5 மேடையில் வெளியிட்டிருந்தார் கமல் ஹாசன்.
இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகை சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சாய் பல்லவி கடைசியாக தமிழில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த என்.ஜி.கே படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan