பாண்டியன் காலில் விழுந்து கதறி அழுது செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் செந்தில் லஞ்சம் வாங்கியதை அறிந்து பாண்டியன் கடும் கோபமடைந்தார். எப்படி உன்னால் லஞ்சம் வாங்க முடிந்தது? உன்னை அப்படியா நான் வளர்த்தேன் என செந்திலை அடித்தார்.

இதன்பின், வாங்கிய லஞ்ச பணத்தையெல்லாம் நல்ல வழியில் செலவு செய்துவிட்டு திரும்ப வீட்டிற்கு வா, இல்லையென்றால் வீட்டு பக்கமே வராதே என பாண்டியன் கூறிவிட்டார்.
கதறி அழுது செந்தில்
இந்த நிலையில், வரும் வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடக்கவிருப்பது குறித்து புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில், தான் லஞ்சமாக வாங்கிய பணத்தை நல்ல விஷயங்களுக்காக செலவு செய்கிறார் செந்தில். பணத்தை முழுவதுமாக செலவு செய்துவிட்டு, பாண்டியனிடம் வந்து கதறி அழுது காலில் விழுகிறார். பாண்டியனும் செந்திலை மன்னித்துவிடுகிறார்.

மேலும், "இந்த விஷயத்தில் மனதளவில் காயப்பட்டது மீனா தான், மீனாவிடம் மன்னிப்பு கேள்" என்று பாண்டியன் கூறுகிறார். செந்தில் செய்த தவறை மன்னித்து மீனா அவரை ஏற்றுக்கொள்வாரா என்பதை வரும் வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடில் பொறுத்திருந்து பார்ப்போம்.
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan