செந்தில்-கவுண்டமணி இருவரும் சண்டையில் உள்ளார்களா, பேசுவது இல்லையா?
தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பிரபலங்கள் செந்தில்-கவுண்டமணி. இவர்கள் கூட்டணியில் வெளிவந்த காமெடிகள் அனைத்தும் இப்போதும் மக்களால் கொண்டாடப்படுகிறது.
இவர்கள் இப்போதும் ஒன்றாக இணைந்து படங்கள் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை, ஆனால் அது நடக்குமா என்பது தெரியாது.
நடிகர் செந்திலின் மூத்த மகன் மணிகண்டன் பல் மருத்துவராக உள்ளார். அவர் அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர் பேசும்போது, எனது அப்பா மற்றும் கவுண்டமணி ஆகியோர் சண்டை போட்டுக் கொண்டனர், இருவரும் பேசிக் கொள்வது இல்லை என சமூக வலைதளங்களில் நிறைய செய்தி வருகிறது.
அதில் உண்மை இல்லை, அவர்களின் அண்ணன்-தம்பி உறவு இப்போதும் நீடிக்கிறது. அவர்களது காம்போவை எல்லோரையும் போல் நானும் மிஸ் செய்கிறேன் என பேசியுள்ளார்.

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
