சீரியலில் நடிக்க வந்த சூப்பர் சிங்கர் புகழ் செந்தில், ராஜலட்சுமி- எந்த சீரியல் தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி படு பிரபலம். இதில் பாடிய பலருக்கும் சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
கடைசியாக சூப்பர் சிங்கர் பெரியவர்களுக்கான 8வது சீசன் நடந்தது, அதில் ஸ்ரீதர் சேனா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அடுத்து சிறுவர்களுக்கான நிகழ்ச்சி தொடங்குமா இல்லை பெரியவர்களுக்கானதே நடக்குமா என்பது தெரியவில்லை.
இந்த சூப்பர் சிங்கரில் நாட்டுப்புற பாடல்களை மட்டுமே பாடி மக்களின் மனதை வென்றவர் செந்தில். இவரது மனைவி ராஜலட்சுமியும் இதில் கலந்துகொண்டு பிரபலம் அடைந்தார்.
தற்போது இவர்கள் இருவரும் சீரியலில் நடிக்க வந்துள்ளனர். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே சீரியலில் நடிக்க வந்துள்ளனர். அவர்கள் அந்த சீரியல் நடிகர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
நவராத்திரி ஸ்பெஷல் நிகழ்ச்சியில் அவர்கள் பாடல் பாட வந்திருப்பார்கள் என கூறப்படுகிறது.