சில மாதங்களுக்கு நிறுத்தப்படுகிறதா விஜய்யின் சூப்பர் ஹிட் சீரியல்- ரசிகர்கள் ஷாக்
விஜய் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட சீரியல்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் எல்லாம் தமிழ்நாட்டில் அதிக மக்களால் பார்க்கப்படும் ஒரு தொடர்.
இதே தொலைக்காட்சியில் குடும்ப பாங்கான கதைக்களத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறது செந்தூரப் பூவே சீரியல். இதில் கடந்த சில நாட்களாக மாயாஜாலம், மந்திரம் போன்ற காட்சிகளாக இடம் பெற்று வருகின்றன.
இப்போது எந்த விஷயம் என்றால் இந்த சீரியல் சில மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது எனப்படுகிறது. எதற்காக என்பது எல்லாம் தெரியவில்லை, இப்படி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் 5வது சீசன் வரப்போகிறது என்பதால் நேரம் காரணமாக இந்த சீரியல் சில மாதங்கள் நிறுத்தப்படுகிறதா என சில கமெண்ட்ஸ் வருகிறது.