எனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்தது, ஒரே வருடத்தில் இறந்த கணவர் குறித்து சீரியல் நடிகை- எமோஷ்னல் பேட்டி
ஸ்ருதி சண்முகபிரியா
சன் தொலைக்காட்சியில் 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை ஒளிபரப்பான நாதஸ்வரம் தொடரில் கோபியின் 4 தங்கைகளில் ஒருவராக நடித்தவர் தான் ஸ்ருதி சண்முகப்பிரியா.
அந்த தொடர் மூலம் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்க வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல், பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்கள் நடித்து வந்தார்.
கடந்த ஆண்டு இவருக்கு அரவிந்த் சேர் என்பவருடன் திருமணம் நடந்தது, ஆனால் அவரது கணவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
நடிகையின் பேட்டி
பல மாதங்களுக்கு பின் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, அரவிந்த் மரணத்தை பலரும் ஆராய்ச்சி செய்கிறார்கள், மரணத்தை ஏன் ஆராய்ச்சி செய்ய வேண்டும், இது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
இதனால் தான் அவரின் இறுதி சடங்குகள் முடிந்ததும் ஒரு வீடியோ இன்ஸ்டாவில் பதிவிட்டேன்.
ஒரு நாள் இரவு அரவிந்தின் புகைப்படத்தை பார்த்து எனக்கு மட்டும் வாழ்க்கையில் இப்படி எல்லாம் ஏன் நடந்தது என்று நினைத்துப் பார்த்து கோடி முறை அழுது இருக்கிறேன் என எமோஷ்னலாக பேசியிருக்கிறார்.
You May Like This Video