தியேட்டரில் அஜித் ரசிகர்கள் செய்த செயல்.. வியந்து கூறிய சீரியல் நடிகர்
நாளை நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் அதை கொண்டாட தயாராகி வருகின்றனர். தற்போதே சமூக வலைத்தளங்களில் அஜித்துக்கு பிறந்தநாள் கொண்டாட்டங்களை தொடங்கிவிட்டன.
இந்நிலையில் விஜய் டிவி அஜித் பிறந்தநாளுக்கு ஒரு நிகழ்ச்சி நடத்தி இருக்கிறது. அதில் வேலைக்காரன் சீரியல் ஹீரோ அஜித் பற்றி ஒரு விஷயம் கூறி இருக்கிறார்.
தியேட்டரில் வீரம் முதல் நாள் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஒரு நண்பர் மட்டும் மனைவியை அழைத்து வந்திருந்தார். அந்த பெண் உள்ளே செல்ல வழி இல்லாமல் அனைவரும் ஆடி கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அனைவரும் அப்படியே நிறுத்திவிட்டு அந்த பெண்ணுக்கு வழி விட்டு அவர் உள்ளே சென்ற பின் தான் இவர்கள் கொண்டாட்டத்தை மீண்டும் தொடங்கினர்.
ஒரு ஹீரோவை பின்பற்றினால் அவரிடம் இருந்து இப்படித்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கூறி உள்ளார்.