விஜய் டிவியின் சீரியல் நடிகருக்கு கோலாகலமாக நடந்த திருமணம்.. அழகிய ஜோடியின் போட்டோ வைரல்
விஜய் டிவி
தமிழ் சின்னத்திரை நடிகர்கள் எல்லோருமே இப்போது மக்களின் பேவரெட் பிரபலங்களாக வலம் வருகிறார்கள்.
படங்களில் நடிப்பவர்களை தாண்டி சின்னத்திரை கலைஞர்களுக்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது. இப்போதெல்லாம் ஒரு கடை திறப்பு விழா என்றாலே சின்னத்திரை நடிகர்கள் தான் வருகிறார்கள்.
தற்போது ஒரு சின்னத்திரை நடிகரின் திருமண செய்தி தான் வந்துள்ளது.
திருமணம்
விஜய் டிவியில் அண்மையில் தொடங்கப்பட்ட புதிய தொடர்களில் ஒன்று வீட்டுக்கு கூடு வாசப்படி. இந்த தொடரில் கதாநாயகனின் தம்பியாக நடித்து வருபவர் அவினாஷ்.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு அண்மையில் மரியா ஜோசப் என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது.
இந்த புதிய ஜோடியின் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் புதுமண தம்பதிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.