ரச்சிதாவுடன் இன்னும் விவாகரத்து ஆகவில்லை, ஆனால்?- சீரியல் நடிகர் தினேஷ் ஓபன் டாக்
தினேஷ்-ரச்சிதா
பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் திருமணம் செய்துகொள்வது இப்போது அதிகம் பார்த்து வருகிறோம்.
அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் ரச்சிதா மற்றும் தினேஷ்.
இவர்கள் சந்தோஷமாக தான் வாழ்ந்து வந்தார்கள், ஆனால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த ரச்சிதா தினேஷ் மீது புகார் அளித்து காவல் நிலையம் எல்லாம் சென்றது நமக்கு தெரிந்த விஷயம் தான்.

தினேஷ் பேட்டி
இந்த நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் சீரியல் நடிகர் தினேஷ் பேசும்போது, எனக்கும் ரச்சிதாவிற்கும் விவாகரத்து வழக்குப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் விவாகரத்து ஆகவில்லை.
பிக்பாஸில் ரச்சிதா கலந்துகொண்ட போது அவர் வெற்றிப்பெற வேண்டும் என நினைத்தேன். ஒருவேளை நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக இருந்தால் கூட அந்த டைட்டில் அவருக்காக வெற்றிப் பெற்று கொடுக்கலாம்.
ஆனால் எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு விரும்பவில்லை, நான் இப்போது சீரியலில் பிஸியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri