தோசையில் Sorry சுட்டு கொடுத்து மன்னிப்பு கேட்கும் பிரபல சீரியல் நடிகர்.. யார், யாருக்காக பாருங்க
சீரியல் நடிகர்
ஜீ தமிழில் 2018ம் ஆண்டு ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என்ற தொடர் முலம் தமிழ் மக்களுக்கு அறிமுகம் ஆனவர் நடிகர் விஷ்ணுகாந்த். இந்த தொடரை தொடர்ந்து அவர் என்றென்றும் புன்னகை தொடரில் நடித்தார்.
பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சிற்பிக்குள் முத்து என்ற தொடரில் நடித்து வந்தார். இந்த தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சம்யுக்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் விஷ்ணுகாந்த்.
ஆனால் திருமணமாகி 15 நாட்களிலேயே விஷ்ணு-சம்யுக்தா இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தார்கள். இருவரும் மாற்றி மாற்றி குறை சொல்லி வந்தார்கள். இப்போது இருவரும் அவரவர் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
தோசை வீடியோ
தற்போது விஷ்ணுகாந்த் தெலுங்கில் குண்டிநிண்டா குடிகண்டலு என்ற சீரியலில் நடித்து வருகிறார். தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் இந்த தொடருக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
அண்ணாமலை பேசாமல் இருந்தும் திருந்தாத விஜயா, ஸ்ருதியை அடக்கி வைக்க அவர் போட்ட பிளான்... சிறகடிக்க ஆசை புரொமோ
இந்த சீரியல் சிறகடிக்க ஆசை சீரியலின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விஷ்ணுகாந்த் தோசையில் சாரி சுடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த பலருமே சீரியல் காட்சியா அல்லது வேறு யாருக்காக இப்படி தோசை சுடுகிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி கமெண்ட் செய்து வருகிறார்கள்.