சரிகமப நிகழ்ச்சிக்காக அம்மன் போல் வேடமிட்ட சீரியல் நடிகர்.. இதுவே முதல் முறை.. புகைப்படம் இதோ
சரிகமப
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது சரிகமப சீசன் 5 சீனியர். வாராவாரம் வித்தியாச வித்தியாசமான சுற்றுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வாரம் டெடிகேஷன் சுற்று நடந்துள்ள நிலையில், அடுத்த வாரம் பக்தி சுற்று நடைபெறவுள்ளது. பக்தி சுற்று என்றாலே, பாடகர்கள் ஒரு பக்கம் பாடல் பாட, மறுபக்கம் நடிகர், நடிகைகள் கடவுள் போல் வேடமிட்டு இருப்பார்கள்.
அம்மன் போல் வேடமிட்ட சீரியல் நடிகர்
இதுவரை நடந்த பக்தி சுற்றில் அம்மனாக நடிகைகள் மட்டுமே வேடமிட்டு நடித்துள்ளனர். ஆனால், தற்போது முதல் முறையாக அம்மன் போல் நடிகர் ஒருவர் வேடமிட்டுள்ளார்.
காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்த நடிகர் திலீப்குமார் தான் அம்மன் வேடமிட்டு சரிகமப-வில் வந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

வட கொரியாவின் நான்கு கொடூர முகாம்கள்... செத்துப்பிழைக்கும் 65,000 கைதிகள்: அதிர்ச்சி பின்னணி News Lankasri
