சீரியல் நடிகர் மிர்ச்சி செந்திலின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- விருது மேடையில் நெகிழ்ச்சி சம்பவம்
மிர்ச்சி செந்தில்
வானொலியில் நிகழ்ச்சி, தொலைக்காட்சியில் சீரியல்கள் என கலக்கிக் கொண்டிருப்பவர் மிர்ச்சி செந்தில். நான், நீங்கள், ராஜா சார் என இவர் வானொலியில் செய்த நிகழ்ச்சியை இப்போதும் மக்கள் பாராட்டுவார்கள்.
தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா என்ற தொடரில் நாயகனாக நடித்து வருகிறார். அண்மையில் தொடங்கப்பட்ட இந்த தொடருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
2007ம் ஆண்டு மதுர தொடரில் நடிக்க தொடங்கியவர் சரவணன்-மீனாட்சி தொடரில் நடித்து பெரிய ரீச் பெற்றார்.
அந்த தொடர் மிர்ச்சி செந்திலுக்கு கொடுத்த ஆதரவால் தொடர்ந்து மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் என தொடர்ந்து நடித்தார்.
இடையில் கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை என்ற வெப் தொடரிலும் தனது மனைவி ஸ்ரீஜாவுடன் இணைந்து நடித்தார்.
எமோஷ்னல் மேடை
இந்த நிலையில் ஜீ தமிழ் குடும்ப விருதுகளில் செந்தில் சிறந்த நடிகருக்கான விருது பெற்றுள்ளார். அப்போது அவரது தாயார் முதன்முறையாக மேடைக்கு வந்துள்ளார். தனது அம்மாவிடம் விருதை கொடுத்துவிட்டு செந்தில் எமோஷ்னல் ஆகியுள்ளார்.
அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

”அடிக்காதீங்க அண்ணா” நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி கொடூரம் - 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் IBC Tamilnadu
