உதவி இயக்குனரை அடித்த சர்ச்சை.. பணம் கொடுத்து சமரசம் செய்த சீரியல் நடிகர் நவீன்?
கலர்ஸ் தமிழின் இதயத்தை திருடாதே சீரியல் மூலமாக பாப்புலர் ஆனவர் நவீன். அவர் பிரபல செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகர் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்.
துணை இயக்குனரை அடித்த சர்ச்சை
இதயத்தை திருடாதே சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் அதே சேனலில் அடுத்து கண்ட நாள் முதல் என்ற தொடரில் நவீன் நடிக்க தொடங்கினார்.
கண்ட நாள் முதல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நவீன் துணை இயக்குனரை தாக்கினார் என சமீபத்தில் சர்ச்சை வெடித்தது. அவரை நடிக்க வரும்படி அழைத்ததற்காக தான் அவர் தாக்கினர் என கூறப்பட்டது.
சமரசம்
துணை இயக்குனர் இந்த சம்பவம் பற்றி சங்கத்தில் புகார் அளித்திருந்தார். மேலும் அவர் கண் பகுதியில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது நவீன் அவருடன் சமரசம் ஆகிவிட்டதாக போட்டோ வெளியாகி இருக்கிறது.
"ஷூட்டிங் அழைத்ததற்காக நடந்த பிரச்சனை இல்லை இது. ஒரு சீன் தொடர்பாக நடந்த வாக்குவாதத்தல் அவர் என்னை அடிக்க வந்தார், அப்போது தடுத்ததால் தான் அவர் முகத்தில் காயம் ஏற்பட்டது. அவருக்கு பணம் கொடுத்தது உண்மை தான், அவரது சிகிச்சைக்காக தான் நான் அதை செய்தேன்" என நவீன் தெரிவித்து இருக்கிறார்.
இயக்குனர் பாக்யராஜின் மகளா இது.. குடும்பமாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்