சீரியல் நடிகர் பப்லு ப்ருத்விராஜிற்கு அடித்த ஜாக்பாட்... படு குஷியில் பிரபலம், என்ன விஷயம் தெரியுமா?
ப்ருத்விராஜ்
பப்லு என்று அழைக்கப்படும் நடிகர் ப்ருத்விராஜ் தன்னுடைய ஆரம்ப காலத்திலேயே மறைந்த கே.பாலசந்தர் இயக்கத்தில் படங்களில் நடித்து ஏராளமாக ரசிகர்களை கவர்ந்தார்.
அப்படியே நடித்துவந்தவர் பின் சின்னத்திரை பக்கமும் வந்தார், ஏராளமான தொடர்களிலும் நடித்து வந்தார். வாயி ராணி, கண்ணான கண்ணே போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இடையில் நிறைய சர்ச்சைகளிலும் சிக்கி வந்தவர் இப்போது சினிமாவில் படு பிஸியாகிவிட்டார்.
நடிகரின் பேட்டி
கடைசியாக பாலிவுட் படமான அனிமல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
அண்மையில் ஒரு பேட்டியில் பப்லு, அனிமல் படத்தில் நடிப்பதற்கு முன்னதாக தனக்கு எந்த படத்தின் வாய்ப்பும் கிடைக்கவில்லை, தன்னம்பிப்பை எல்லாம் இழந்துவிட்டு தான் மிகவும் கஷ்டப்பட்டதாக கூறியிருந்தார்.
ஆனால் அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது தன்னுடைய வாழ்க்கை மாறியுள்ளதாகவும் 23 படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
