குடும்பத்துடன் சென்று புதிய கார் வாங்கியுள்ள பிரபல சீரியல் நடிகர் புவியரசு... வீடியோவுடன் இதோ
நடிகர் புவியரசு
ஜீ தமிழில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகள் சீரியல் மூலம் நடிகராக தனது பயணத்தை தொடங்கியவர் புவி.
சீரியல் நடிகர் என்பதை தாண்டி நடனத்தில் தேர்ச்சி பெற்ற இவர் நிறைய நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான வித்யா நம்பர் 1, இதயம் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.
நடிகர், நடன கலைஞர் என்பதை தாண்டி புவியரசு பாக்ஸரும் ஆவார்.
ஜீ தமிழில் இருந்து விஜய் டிவி பக்கம் வந்தவர் Mr&Mrs சின்னத்திரையில் தனது மனைவியுடன் கலந்துகொண்டார்.
புதிய கார்
பிரியா என்பவரை திருமணம் செய்துகொண்ட புவியரசிற்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. தற்போது என்ன தகவல் என்றால் புவியரசு தனது குடும்பத்துடன் சென்று புதிய காரை வாங்கியுள்ளார்.
அங்கு எடுக்கப்பட்ட வீடியோவை அவரே தனது இன்ஸ்டாவிலும் பதிவு செய்துள்ளார்.