பல பெண்களுடன் தொடர்பு, தலைமறைவான சன் டிவி சீரியல் நடிகர்- மனைவி கொடுத்த புகார்
சீரியல் நடிகர்
மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ராகுல் ரவி.
தமிழில் படங்கள் நடிக்கவில்லை, ஆனால் நந்தினி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார், பின் சில தொடர்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
இவருக்கு 2020ம் ஆண்டு தனது காதலி லட்சுமி நாயரை ரவி திருமணம் செய்துகொண்ட நிலையில் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் இவர்கள் பிரபலம் ஆனார்கள்.
மனைவி கொடுத்த புகார்
கடந்த சில மாதங்களிலேயே இந்த தம்பதி பிரிந்த நிலையில் ராகுல் ரவிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி அவரது மனைவி லட்சுமி நாயர் புகார் அளித்தார்.
இதனால் ராகுல் ரவி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதையடுத்து முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்ய அது நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 2 மாதங்களாக தலைமறைவாக இருக்கும் ராகுல் ரவிக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
