சித்தி சீரியல் நடிகர் மரணம்.. நடிகை ராதிகா உருக்கமான இரங்கல் பதிவு
நடிகை ராதிகா கெரியரில் முக்கிய சீரியல்களில் ஒன்று சித்தி. அந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருந்தது. அந்த தொடரில் ஒரு முக்கிய ரோலில் நடித்தவர் ரவிக்குமார்.
100 மலையாள சீரியல்களுக்கு மேல் நடித்து இருக்கும் அவர் தமிழில் பல சீரியல்கள் மற்றும் படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து இருக்கிறார்.
விஜய் டிவியின் செல்லம்மா உள்ளிட்ட தொடர்களிலும் அவர் நடித்து இருக்கிறார்.
மரணம்
நடிகர் ரவிக்குமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணம் அடைந்தார்.
அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை ராதிகா மிக உருக்கமாக இன்ஸ்டாவில் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
அவர் தனது குடும்பத்தில் ஒருவர் போல என குறிப்பிட்டு இருக்கும் ராதிகா, அவரது சிரிப்பு மற்றும் ஆழமான குரல் எப்போதும் மனதில் இருக்கும் என கூறி இருக்கிறார்.