சினிமாவில் இப்போதும் சாதி பிரச்சனை உள்ளது- சந்தித்த சம்பவத்தை கூறி வருத்தப்பட்ட வானத்தைப் போல சீரியல் நடிகர்
வானத்தைப் போல
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேசன் மகனாக அறிமுகமாகி இப்போதும் தொடர்களில் நடித்து வருபவர் ஸ்ரீ.
2001ம் ஆண்டு கீதாஞ்சலி என்ற சீரியல் மூலமாக தனது பயணத்தை தொடங்கி கண்மணி, அகல்யா, ஆனந்தம், மலர்கள், சிவசக்தி, இதயம், கனா காணும் காலங்கள், பிள்ளை நிலா, தலையணை பூக்கள், யாரடி நீ மோகினி என பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.
இப்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வானத்தைப் போல தொடரில் நாயகனாக நடித்து வருகிறார்.
சமீபத்திய பேட்டி
அண்மையில் ஒரு பேட்டியில் சீரியல் நடிகர் ஸ்ரீ சினிமா பயணத்தில் தான் சந்தித்த ஒரு சோகமான விஷயம் குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், பல இடங்களில் என் சாதியை வைத்து தாழ்த்தி பேசுவார்கள். ஒரு படத்தில் நடிக்க சென்ற போது என்னுடைய பேச்சை வைத்து இவன் அந்த ஆளுதானே என்று சொன்னார்கள்.
அருகில் இருந்தவரும் ஆமாம், வேறு வழியில்லாமல் தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தேன் என்று கூறினார். திறமையை வைத்து இல்லாமல் சாதியை பார்த்து வாய்ப்பு தருகிறார்கள்.
இப்போதும் சினிமாத்துறையில் சாதி பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது என மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.