மகன் முதல் பிறந்தநாளை கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் வெங்கட்... என்ட்ரி கொடுத்த விஜய் அப்பா
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியில் முதல் பாகம் வெற்றிகரமாக முடிந்து இப்போது 2ம் பாகமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
முதல் பாகம் மற்றும் 2ம் பாகத்திலும் நடிப்பவர் தான் வெங்கட் ரங்கநாதன். முதல் பாகத்தில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்தார், இப்போது ஒளிபரப்பாகும் 2ம் பாகத்தில் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் அழகே அழகு சீரியல்களின் மகா சங்கமம் நடந்து வருகிறது.

கொண்டாட்டம்
செந்திலாக நடித்துவரும் வெங்கட் ரங்கநாதன் தற்போது தனது மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

நண்பர்கள், உறவினர்கள், சக நடிகர்கள் என அனைவரையும் தனது மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அழைத்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்கள், நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் என பலர் கலந்துகொண்டனர்.
