கோமாவுக்கு சென்ற சீரியல் நடிகர் வேணு அரவிந்த் தற்போதைய நிலை என்ன தெரியுமா?- வெளிவந்த விவரம்
வேணு அரவிந்த்
90களில் தமிழ் சின்னத்திரையில் வெளிவந்த தொடர்களையும், அதில் நடித்தவர்களையும் மக்களால் அவ்வளவு சீக்கிரம் மறக்கவே முடியாது. அந்த அளவிற்கு அப்போதெல்லாம் மிகவும் தரமான சீரியல்கள் வந்தன, அதில் நடித்தவர்களும் நல்ல அங்கீகாரம் பெற்றார்கள்.
காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன், செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் வேணு அரவிந்த்.
இவர் சில மாதங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து குணமடைந்த சில நாட்களிலேயே நிமோனியா வந்துள்ளது. அப்போது சிகிச்சை செய்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் கட்டி இருப்பதை கண்டறிந்து உடனே அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இதனால் அவர் கோமாவுக்கு சென்றுவிட்டதாக நிறைய செய்திகள், சில பிரபலங்கள் அது வெறும் வதந்தி வேணு நன்றாக இருக்கிறார் என கூறி வந்தனர்.
வேணு அரவிந்த் பேட்டி
நான் இப்போது உயிரோடு இருக்கிறேன், இனிமேல் என்ன நடக்கப்போகிறது என்பதை மட்டும் பார்க்கலாம். எனக்கு தலையில் சின்ன கட்டி, நீக்கிவிட்டார்கள், இப்போது நலமாக உள்ளேன்.
நான் நிறைய வில்லனாக நடித்து பலரின் பாவத்தை சம்பாதித்ததனால் தான் எனக்கு இப்படி நடக்கிறதோ என நினைத்ததாக அவர் கூறியுள்ளார்.