சீரியல் நடிகர் வினோத் பாபுவிற்கு அடித்த லக்- இப்படியொரு படத்தில் நடிக்கப்போகிறாரா?
வினோத் பாபு
சீரியல் நாயகர்களில் மக்களிடம் பிரபலமாக இருப்பவர்களில் ஒருவர் தான் வினோத் பாபு. இவர் 2018ம் ஆண்டு சிவகாமி என்ற தொடரில் நடிக்க தொடங்கியுள்ளார்.
பின் விஜய் தொலைக்காட்சியில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற தொடரில் நாயகனாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.
இப்போது விஜய் தொலைக்காட்சியிலேயே தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற தொடரில் அட்டகாசமாக நடித்து வருகிறார்.
கதையிலும் நல்ல திருப்பங்கள் ஏற்பட்டு விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
லேட்டஸ்ட் தகவல்
நன்றாகவும் பாடக் கூடிய திறமை கொண்ட வினோத் பாபு புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். Short Film ஒன்றில் நாயகயாக நடிக்க வினோத் பாபு ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். ஒரு கோடை காலத்தில் என பெயர் வைத்துள்ளார்களாம், மற்றபடி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் நல்ல திறமையான நடிகர் வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
கடந்த வார TRPயில் டாப்பில் வந்த சீரியல்கள்- கெத்து காட்டு சன் டிவி, விஜய் டிவி என்ன ஆனது தெரியுமா?

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
