ஒன்றாக இணைந்து பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, சீரியல் நடிகர் நடிகைகள் - புகைப்படத்தை பாருங்க
விஜய் டிவியில் தற்போது TRPயின் உச்சத்தில் இருக்கும் சீரியல்கள் என்றால் அது பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கிலட்சுமி சீரியல்கள் தான்.
அதிலும் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்ந்து பல வாரங்களாக விஜய் டிவியின் TRP ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கிறது.
அதே போல் சென்ற வருடம் துவங்கப்பட்ட பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விஜய் டிவியின் இரண்டாவது முக்கிய சீரியலாக வளம் வருகிறதாம்.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் நடிகைகள் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.
இதில் பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோ அருண், அகிலன், கண்மணி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கண்ணன், முல்லை மற்றும் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து க்ரித்திகா மற்றும் எழில் உள்ளனர்.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தற்போது இந்த புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..