சின்னத்திரையில் கலைமாமணி விருது பெறும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
சின்னத்திரை
இந்திய சினிமாவில் சமீபத்தில் உயரிய விருதான தேசிய விருது வழங்கப்பட்டது.
அறிவிப்பு எப்போதோ வெளிவந்த நிலையில் விருதுகள் சமீபத்தில் தான் கொடுக்கப்பட்டது.
அதேபோல் தமிழ்நாடு அரசின் சார்பாக இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகிறது.
2021, 2022, 2023ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது பெறுபவர்களின் விவரம் வெளியாகி இருந்தது. கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படவுள்ளது.
சின்னத்திரை
தற்போது சின்னத்திரை கலைஞர்களில் சிலர் கலைமாமணி விருது பெறுகிறார்கள்.
அவர்கள் யார் யார் என்றால் சீரியல் பிரபலங்கள் பி.கே.கமலேஷ், மெட்டி ஒலி காயத்ரி. அதோடு சின்னத்திரை தொகுப்பாளர் என்.பி.உமா சங்கர் பாபு மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி ஆகியோருக்கும் விருது கிடைத்துள்ளது.