சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வருகிறதா, கடைசி எபிசோட் என்ன?... ஓபனாக கூறிய தொடர் நடிகை
எதிர்நீச்சல்
சன் டிவியில் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒளிபரப்பான ஒரு தொடர் எதிர்நீச்சல்.
திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் ஆணாதிக்கம், பெண் அடிமை போன்று சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் நிறைய விஷயங்களை காட்டி வருகிறது.
கதையை தாண்டி இதில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து ரசிகர்களிடம் தொடர் மூலம் செம ஸ்கோர் செய்து வந்தார், ஆனால் இப்போது அவர் நம்முடன் இல்லை.
குணசேகரன் கதாபாத்திரம் மாற்றம் நடந்ததில் இருந்து சீரியலுக்கான டிஆர்பி குறைந்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.

சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம் மலேசியா மாமா இத்தனை தொடர்களை இயக்கியுள்ளாரா?- யாருக்கும் தெரியாத தகவல்
உண்மை தகவல்
இன்று காலை முதல் இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாகவும், ஜுன் மாதம் தொடரின் கடைசி எபிசோட் ஒளிபரப்பாகும் என தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் 4 மகன்களின் அம்மாவாக நடித்துவரும் நடிகை சத்யபிரிவின் இன்ஸ்டாவில் ஒரு ரசிகர் எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வருவது உண்மையா என கேட்டுள்ளார்.
அதற்கு அவர் சோகமான ஸ்மைலி போட்டு தொடர் முடிவுக்கு வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri