திருமணத்திற்கு பிறகு புதிய கார் வாங்கியுள்ள விஜய் டிவி சீரியல் நடிகை அக்ஷயா... போட்டோ பாருங்க
ஆஹா கல்யாணம்
Serial Actress Akshaya Buys Car: விஜய் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அப்படி ஒளிபரப்பாகும் நிறைய சீரியல்கள் ரீமேக் கதையாகவும், தமிழிலேயே தொடங்கப்பட்ட சீரியல்களாகவும் இருக்கிறது.

தெலுங்கு சினிமாவில் ஒளிபரப்பாகி ஹிட்டான Brahmamudi என்ற சீரியலின் ரீமேக் கதையாக விஜய்யில் ஒளிபரப்பான சீரியல் தான் ஆஹா கல்யாணம்.
கடந்த 2023ம் ஆண்டு மௌனிகா, விக்ரம் ஸ்ரீ, அக்ஷயா, விபிஷ், காயத்ரி ஸ்ரீ, பவ்யா ஸ்ரீ, ஆர்.ஜி.ராம் என பலர் நடிக்க இந்த சீரியல் ஒளிபரப்பானது. மொத்தம் 644 எபிசோடுகள் ஒளிபரப்பாக அக்டோபர் 3, 2025ம் ஆண்டு சந்தோஷமான காட்சிகளுடன் முடிவுக்கு வந்தது.

புதிய கார்
இந்த சீரியலில் முன்னணி நாயகியாக மஹா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அக்ஷ்யா. இவர் சீரியல் முடித்த கையோடு திருமணம் செய்து செட்டில் ஆனார்.

திருமணத்திற்கு பிறகு அக்ஷ்யா சில சீரியல்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார், அதன்பின் எந்த சீரியலிலும் வரவில்லை. இந்த நிலையில் சீரியல் நடிகை அக்ஷ்யா தனது கணவருடன் இணைந்து புதிய கார் ஒன்று வாங்கியுள்ளார்.
சிவப்பு நிறத்தில் Hyundai வகை காரை வாங்கியுள்ளார். இதோ அவரே பதிவிட்ட புகைப்படம்,