சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்- புகைப்படம் ஷேர் செய்து வருத்தப்படும் சஞ்சீவ்
சீரியல் பிரபலங்கள் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொள்வது வழக்கமான ஒரு விஷயம். நிறைய பிரபலங்கள் சீரியல் மூலம் பழக்கம் ஏற்பட்டு நிஜ வாழ்க்கையில் ஒன்றாக இணைந்துள்ளார்கள்.
அப்படி இணைந்த ஒரு இளம் ஜோடி என்றால் சஞ்சீவ்-ஆல்யா மானசா தான். ராஜா ராணி என்கிற சீரியல் மூலம் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாகி பின் காதலர்கள் ஆனார்கள்.
திருமணமும் செய்தார்கள். இப்போது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளார்.
இன்று நடிகை ஆல்யா மானசாவின் பிறந்தநாள், எப்போதும் பெரிய அளவில் கொண்டாடுவார்கள். இந்த முறை லாக் டவுன் என்பதால் வீட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் கேக் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்து பாப்புவின் பிறந்தநாள் இந்த முறை லாக் டவுனில் மாட்டிக் கொண்டது, கொஞ்சம் வருத்தமாக உள்ளது என பதிவு செய்துள்ளார்.