புதிய Projectல் இணைந்துள்ள பிரபல சீரியல் நடிகை அஷ்வதி.. முழு விவரம் இதோ
நடிகை அஷ்வதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாக மோதலும் காதலும் தொடரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
கடந்த 2023ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடர் எப்போதோ முடிந்து விட்டது. இந்த தொடரின் கதை விஜய் டிவியிலேயே ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரை போலவே உள்ளது என்ற விமர்சனம் வந்தது.
இதையெல்லாம் தாண்டி இந்த தொடர் மூலம் தமிழக ரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியாக மாறியவர் தான் நடிகை அஷ்வதி. இந்த தொடர் முடித்த கையோடு சன் டிவி பக்கம் சென்றவர் மலர் தொடரில் நடித்து வந்தார்.
புதிய Project
மலர் சீரியல் முடிவடைய மலையாளத்தில் தொடர் கமிட்டாகி நடித்து வந்தார், தற்போது அஷ்வதி மீண்டும் தமிழ் பக்கம் வந்துள்ளார்.
அதாவது ஜியோ ஹாட் ஸ்டாரில் ஹிட் வெப் சீரியஸாக இருக்கும் Heart Beat 2வில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். இந்த செய்தி கேட்டதும் ரசிகர்கள் சூப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்பு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: குறிவைக்கப்பட்ட முக்கிய நகரங்கள் News Lankasri
