பயங்கர விபத்து, மூளை நரம்பில் பாதிப்பு, பிழைக்க முடியாது என்ற மருத்துவர்- பிரபல விஜய் டிவி சீரியல் நடிகையின் சோக பக்கம்
நடிகை அஸ்ரிதா
விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் முடிவடைந்த ஒரு தொடர் தமிழும் சரஸ்வதியும்.
இந்த தொடரில் ராகினி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கோபத்திற்கு ஆளானவர் தான் அஸ்ரிதா.
அம்மா அப்பா என்ற சீரியல் மூலமாக நடிக்க தொடங்கியவர் கனா காணும் காலங்கள், தேன்மொழி பிஏ, நாம் இருவர் நமக்கு இருவர், தமிழும் சரஸ்வதியும், சொந்த பந்தம், கல்யாண பரிசு என தொடர்ந்து சீரியல்கள் நடித்திருக்கிறார்.
சீரியலை தாண்டி அஸ்ரிதா தெகிடி, திருமணம் எனும் நிக்கா, சில நிமிடங்களில், என்னை அறிந்தால், ஆறாவது சினம், கொரில்லா, வனமகன் போன்ற படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்துள்ளார்.

பயங்கர விபத்து
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது வாழ்க்கையில் சந்தித்த பெரிய பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், தனது 23 வயதில் நடந்த விபத்தில் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போய்விடும் என்றும் இனி நடக்கவே முடியாது, உயிர் வாழவே முடியாது.

மேலும் இவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கு 10% தான் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்களாம்.
ஆனால் நான் என்னுடைய அம்மா மற்றும் எனது மன தைரியத்தின் காரணமாகவே ஒரு மாதத்திற்குள் கேமரா முன் நின்றேன் என்று தனது வாழ்க்கையில் நடந்த பயங்கர விஷயம் குறித்து கூறியிருக்கிறார்.

You May Like This Video
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan