31வது பிறந்தநாளை சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி எப்படி கொண்டாடியுள்ளார் பாருங்க.. பார்ட்டி போட்டோஸ்
பிரியங்கா நல்காரி
சின்னத்திரை ரசிகர்களை நடிப்பு மற்றும் போட்டோ ஷுட்கள் மூலம் கட்டிப்போட்டு வைத்தவர் பிரியங்கா நல்காரி. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா என்ற தொடர் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.
இந்த தொடருக்கு பின் ஜீ தமிழ் பக்கம் சென்றவர் தொடர்ந்து தொடர்கள் நடித்து வந்தார். இடையில் திருமணம் பின் பிரிவு, சொந்த தொழில் என அடுத்தடுத்து பிரியங்கா குறித்து நிறைய விஷயங்கள் இணையத்தில் வெளியான வண்ணம் இருந்தன.
பார்ட்டி
இந்நிலையில், தனது 31வது பிறந்தநாளை நண்பர்களுக்கு பார்ட்டி வைத்து கொண்டாடி உள்ளார் பிரியங்கா நல்காரி.
தற்போது, இது தொடர்பான புகைப்படங்களை பிரியங்கா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் பலரும் அவர்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.