என் அம்மாவே என்னை இவ்வளவு மோசமாக விமர்சித்தார்கள்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகை வருத்தம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
கூட்டுக் குடும்பம், அது அவ்வளவு அழகான உறவுமுறை.
ஆனால் அந்த உறவுமுறை என்றால் என்ன, எப்படி இருக்கும் என யாருக்குமே தெரிவதில்லை, காரணம் யாருமே கூட்டுக் குடும்பமாக இருப்பது இல்லை. அந்த அழகிய உறவுமுறையை காட்டும் வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
முதல் பாகத்தை தொடர்ந்து இப்போது 2ம் பாகம் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
இன்றைய எபிசோட்
சீரியலின் இன்றைய எபிசோட் ஹைலைட் என்றால் மயிலின் அப்பா கடையில் செய்யும் அட்டகாசம் தான். கடைக்கு வந்ததில் இருந்து ஒரு வேலையும் செய்யவில்லை, மாறாக பாண்டியனுக்கு கோபத்தை ஏற்படுத்தும் வகையில் அனைத்து விஷயங்களையும் செய்கிறார்.
அவரை எப்படி சமாளிப்பது என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார் சரவணன். இன்று வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை பணம் கொடுக்காமல் எடுத்துச் செல்கிறார்.
இன்னொரு பக்கம் செந்தில் தனி வீட்டிற்கு செல்வது குறித்து பேச மீனா கோபத்துடன் அது முடியாது என கூறி சண்டை போடுகிறார்.
சாந்தினி
இந்த தொடரில் சுகன்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர் சாந்தினி.
இவர் ஒரு தொலைக்காட்சி விருது விழாவில் பேசும்போது, இது எல்லாம் மூஞ்சியா, நீ நடிச்சு எங்கே ஜெயிக்க போற, இது எல்லாம் வேலையில்லாத வேலை என என் அம்மாவே விமர்சித்தாங்க. ஆனால் மக்கன் என்னை ஏற்றுக்கொண்டார்கள் என கண் கலங்கி பேசியுள்ளார்.