மறைந்த சீரியல் நடிகை சித்ராவின் நிச்சயதார்த்த புகைப்படத்தை மார்பில் டாட்டுவாக குத்திய ரசிகர்- வைரலாகும் வீடியோ
விஜய்யில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் படு பிரபலம். இந்த தொடரை சித்ரா என்ற நடிகைக்காகவே பலரும் பார்த்தார்கள் என்றே கூறலாம்.
அந்த அளவிற்கு முல்லை என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்திருந்தார், அவரை தவிர வேறுயாரும் முல்லை கதாபாத்திரத்திற்கு நினைத்து பார்க்க முடியாது என்று கூறும் ரசிகர்கள் பலர் உள்ளார்கள்.
திருமணம் எப்போது எப்போது என ரசிகர்கள் கேட்க ஹேமந்த் என்பவரை திருமணம் செய்யப்போவதாக அறிவித்து ஆகஸ்ட் 25ம் தேதி 2020ல் நிச்சயதார்த்தம் செய்தார்.
இருவரும் 2021ல் பிப்ரவரி மாதம் திருமணமும் செய்ய இருந்தார்கள். ஆனால் யாரும் எதிர்ப்பாராத விதமாக நடிகை சித்ரா டிசம்பர் 9ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது தற்கொலைக்கான சரியான காரணம் இப்போது வரை தெரியவில்லை.
இந்த நேரத்தில் மறைந்த நடிகை சித்ராவின் ரசிகர் ஒருவர் அவரின் நிச்சயதார்த்த புகைப்படத்தை தனது மார்பில் டாட்டூவாக குத்தியுள்ளார். இதோ அந்த வீடியோ,