டெங்கு காய்ச்சலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீரியல் நடிகையின் தற்போதைய நிலை... என்ன தெரியுமா?
சீரியல் நடிகை
சின்னத்திரை நடிகைகள் இப்போது தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருக்கிறார்கள். அன்றாடம் அவர்களை திரையில் ரசிகர்கள் பார்க்க நடிகைகளையே அதிகம் பாலோ செய்து வருகிறார்கள்.
இதனாலேயே சின்னத்திரை நடிகைகளும் ரசிகர்களை கவர நிறைய போட்டோ ஷுட் நடத்தி லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
சமீபத்தில் விஜய் டிவி நடிகை ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு தகவல் ரசிகர்களை வருத்தப்பட வைத்தது, அவர் இப்போது எப்படி உள்ளார் எனவும் ரசிகர்கள் அதிகம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
யார் அவர்
அவர் வேறுயாரும் இல்லை பாக்கியலட்சுமி தொடரில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்திலும் மகாநதி தொடரில் கங்கா என்ற வேடத்திலும் நடித்துவந்த திவ்யா கணேஷ் தான்.
டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மகாநதி தொடரில் இருந்து நடிக்க முடியாமல் போனதால் வெளியேறினார். தற்போது உடல்நலம் தேறி மீண்டும் ஆக்டீவாக நடிக்க தொடங்கியிருப்பதாக தெரிகிறது.
அண்மையில் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
ஒரு ரசிகர் நீங்கள் குணமாகிவிட்டீர்களா என கேட்டதற்கு நலமுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.