இரண்டாவது கணவரையும் பிரிந்தாரா சீரியல் நடிகை தீபா- போலீஸில் புகார் அளித்துள்ள பிரபலம்
நடிகை தீபா
தமிழ் சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ், அன்பே சிவம், நாம் இருவர் நமக்கு இருவர், பிரியமான தோழி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தீபா.
இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களின் தயாரிப்பு மேலாளர் சாய் கணேஷ் பாபுவை காதலித்து சில மாதங்களுக்கு முன்பு பதிவுத் திருமணம் செய்துள்ளதாக செய்திகள் வந்தது.
சாய் கணேஷ் பாபு வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு எழுந்ததால் இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டதாக கூறினர்.
காரணம் சீரியல் நடிகை தீபாவிற்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார், கருத்து வேறுபாடு காரணமாக முறைப்படி விவாகரத்து பெற்றுள்ளனர்.
நடிகை புகார்
காதல் திருமணம் செய்த கணவருடன் சேர்ந்து வைக்கக் கோரி சின்னத்திரை தீபா வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகை தீபா தொடர்ந்த வழக்கில் கணேஷ் பாபு காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும் தற்போது அவர் பிரிந்து வாழ்வதால் சேர்த்து வைக்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
கணேஷ் பாபுவின் குடும்பத்தினர் தன்னை சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகவும் தீபா குற்றச்சாட்டு.