மறைந்த தனது கணவர் நேத்ரன் நினைத்து நடிகை தீபா போட்ட சோகமான பதிவு... அறுதல் கூறும் ரசிகர்கள்
நேத்ரன்
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர் நடிகர் நேத்ரன்.
பின் சீரியலில் அறிமுகமாகி கடந்த 25 ஆண்டுகளில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்போது விஜய் டிவியின் பொன்னி, பாக்கியலட்சுமி போன்ற தொடர்களில் நடித்து வந்தார்.
இவரது மனைவி தீபாவும் சீரியல்களில் நடித்து வருகிறார். நேத்ரன் மற்றும் தீபா ஜோடிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
எமோஷ்னல் பதிவு
நடிகர் நேத்ரன் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார், பிரபலங்கள் பலரும் வருத்தத்தை கூறி வந்தனர்.
இந்த நிலையில் மறைந்த நடிகர் நேத்ரனின் மனைவி தீபா, கணவர் இறந்து 10 நாட்கள் மேல் ஆன நிலையில் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.
ஆரம்பத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து, மெமரீஸ் என அழும் எமோஜியை போட்டுள்ளார். நடிகை தீபாவிற்கு பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.