விபத்தில் சிக்கிய நடிகை தேவிப்பிரியா.. ஒருவர் மரணம்.. அதிர்ச்சி சம்பவம்
தேவிப்பிரியா
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தேவிப்பிரியா. களத்து வீடு, சந்திரலேகா, செல்லமே, மாப்பிள்ளை, சக்தி, விக்ரமாதித்யன், அத்திப்பூக்கள் என பல சூப்பர் ஹிட் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வெள்ளித்திரை நடிகைகளுக்கு இவர் டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து
இந்த நிலையில், நடிகை தேவிப்பிரியா விபத்தில் சிக்கிய விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே சென்னை - திருச்சி NH-ல் பஞ்சராகி நின்ற நடிகை தேவிப்பிரியா வின் காரின் மீது மற்றொரு வாகனம் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. டயரை மாற்றி கொண்டிருக்கும்போது பின்னால் வந்து மோதியதில், காரின் ட்ரைவர் முத்துகணேஷ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

நடிகை தேவிப்பிரியா காயமின்றி உயிர் தப்பிய நிலையில், அவரது உதவியாளர் திவாகர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.