பெண்கள் அணியும் உடைகளை குறை சொல்வதை விட... சீரியல் நடிகை பரீனா ஆசாத் பேட்டி
பரீனா ஆசாத்
தொகுப்பாளினியாக முதலில் மக்களின் கவனத்தை பெற்று வந்தவர் தான் பரீனா ஆசாத்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து மக்களின் பேராதரவை பெற்றார். அந்த தொடர் அவருக்கு நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு பிரபலத்தை கொடுத்தது.

அந்த தொடரை தொடர்ந்து வேறு சில தொடர்களிலும் நடித்தார், ஆனால் அந்த அளவிற்கு ரீச் ஆகவில்லை. இப்போது சீரியல்கள் நடிப்பதை தாண்டி தொகுப்பாளினியாக பட நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சி என பேட்டிகள் எடுத்து வருகிறார்.
பேட்டி
அண்மையில் சீரியல் நடிகையும், தொகுப்பாளினியுமான பரீனா ஆசாத் ஒரு பேட்டியில், பெண்கள் அணியும் உடைகளை குறை சொல்வதை விட ஆண் குழந்தைகளுக்கு பெண்களை மதிக்கும் பண்பையும் நல்ல மதிப்பீடுகளையும் வளர்ப்பதே முக்கியம்.

பெண்கள் பாதுகாப்பாக வாழும் சமூகத்தை உருவாக்க பெண் குழந்தைகளுக்கு மட்டும் அறிவுரை கூறாமல் ஆண் குழந்தைகளையும் சரியான மனநிலையுடன் வளர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
