பல லட்சம் மதிப்புள்ள புதிய காரை வாங்கியுள்ள சீரியல் நடிகை பரீனா ஆசாத்... எவ்வளவு விலை தெரியுமா?
பரீனா ஆசாத்
தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கி சீரியல் நடிகையாக வலம் வந்தவர் தான் பரீனா ஆசாத்.
பிரியாத வரம வேண்டும் என்ற சீரியலில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆனால் ஒரு நடிகையாக மக்கள் மனதில் அவர் நின்றார் என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தான்.
இதில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் தரமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார். பிறகு விஜய் டிவியில் உப்பு புளி காரம் என்ற சீரியலிலும் நடித்தார்.

புதிய கார்
தனியார் நிகழ்ச்சிகள், போட்டோ ஷுட்கள் என பிஸியாக இருக்கும் பரீனா தனது இன்ஸ்டாவில் ஆக்டீவாக எப்போதும் பதிவுகள் போட்ட வண்ணம் இருப்பார்.

அப்படி அண்மையில் அவர் ஒரு சூப்பரான விஷயத்தை அறிவித்துள்ளார். அதாவது பரீனா புதியதாக Mercedes C-Class காரை வாங்கியுள்ளார். அதன் விலை ரூ. 50 முதல் 60 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri