தனது மகளுடன் சென்று புதிய கார் வாங்கியுள்ள சுந்தரி சீரியல் புகழ் கேப்ரியல்லா... புகைப்படங்கள் இதோ
கேப்ரியல்லா
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் கேப்ரில்லா செலஸ்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக கலக்கினார். தொலைக்காட்சியை தொடர்ந்து டிக் டாக்கிலும் இவர் பதிவிட்ட வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதன்பின் ஐரா, கபாலி, காஞ்சனா போன்ற சில திரைப்படங்களில் நடித்தார். பின் சின்னத்திரை பக்கம் வந்தவர் சன் தொலைக்காட்சியில் சுந்தரி என்ற சீரியலில் முக்கிய நாயகியாக நடித்தார்.
ஒரு பெண் அடிப்படை வசதி இல்லாத இடத்தில் பிறந்தாலும் திறமையும், முயற்சியும் இருந்தால் ஐஏஎஸ் அதிகாரியாக மாற முடியும் என்பதே அந்த கருத்து. முதல் பாகம், இரண்டாம் பாகம் என சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகியது.

புதிய கார்
சுந்தரி சீரியலை முடித்த கையோடு அவர் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். ஆனால் அங்கு அதிகம் போட்டோ ஷுட்கள் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் இருப்பார்.

சில மாதங்களுக்கு பிறகு கேப்ரில்லாவிற்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் நடிகை கேப்ரில்லா தனது மகள் மற்றும் குடும்பத்தினருடன் சென்று புதிய கார் வாங்கியுள்ளார். இதோ போட்டோஸ்,