கிறிஸ்துமஸ் தினத்தில் புதிய கார் போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை கேப்ரியல்லா...
கேப்ரியல்லா
சுந்தரி, தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் இந்த பெயர் சொன்னாலே போதும் என்ன விஷயம் என்று சொல்லிவிடுவார்கள்.
சன் தொலைக்காட்சியில் 2 சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் சுந்தரி. கிராமத்தில் இருந்து வந்த ஒரு பெண் கலெக்டராக சாதிக்கும் கதையை நோக்கிய ஒரு தொடர் இது. இதில் நாயகியாக கேப்ரியல்லா நடித்தார், ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார்.

புதிய கார்
இந்த சீரியல் முடித்த கையோடு தனது சொந்த ஊருக்கு சென்றார். பின் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிவித்தவருக்கு சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.
தனது இன்ஸ்டாவில் அதிகம் போட்டோ ஷுட் நடத்தி வந்தவர் இன்று கிறிஸ்துமஸ் தினத்தில் ஒரு ஸ்பெஷல் பதிவு போட்டுள்ளார்.

அதாவது அவரது மகளுக்கு அவரின் பாட்டி புதிய கார் வாங்கி கொடுத்துள்ளாராம், அம்மாச்சியின் புத்தாண்டு பரிசு பேத்திக்கு என புதிய காருடன் பதிவு போட்டுள்ளார்.