என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு... ஓபனாக கூறிய சீரியல் நடிகை கேப்ரியல்லா

By Yathrika Mar 19, 2026 08:40 AM GMT
Report

கேப்ரியல்லா

சன் டிவியில் நிறைய ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது. 2 சீசன்கள் எல்லாம் ஒளிபரப்பாகி ஹிட்டடித்த தொடர்கள் பல உள்ளன, அதில் ஒன்று தான் சுந்தரி.

இந்த தொடரில் சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர் தான் சுந்தரி சீரியல் புகழ் கேப்ரியல்லா. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஸ்டேன் ஆப் காமெடியில் அசத்தினார்.

என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு... ஓபனாக கூறிய சீரியல் நடிகை கேப்ரியல்லா | Serial Actress Gabriella About Her Mistake In Life

இவர் டிக்டாக்கில் கருத்து சொல்லும் விதமாக சில வீடியோக்கள் வெளியிட்டு வந்தார்.

அதன்மூலம் பிரபலமானவர் சின்னத்திரையில் கலக்க வெள்ளித்திரையிலும் நயன்தாராவுடன் ஐரா, சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி, காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்தார்.

என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு... ஓபனாக கூறிய சீரியல் நடிகை கேப்ரியல்லா | Serial Actress Gabriella About Her Mistake In Life

பெரிய தவறு

எந்த விஷயமாக இருந்தாலும் தைரியமாக பேசக்கூடிய இவர் வாழ்க்கையில் தான் செய்த தவறு குறித்து பேசியுள்ளார்.

என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு... ஓபனாக கூறிய சீரியல் நடிகை கேப்ரியல்லா | Serial Actress Gabriella About Her Mistake In Life

அதில் அவர், எங்க அப்பா நடனத்துக்கு நோ சொல்லிட்டாரு, அதனால் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்னைக்கு வந்துட்டேன். சமாதானம் செய்து என்னை திரும்ப ஊருக்கு அழைத்து சென்றார்கள்.

அப்போது ஊரில் இருந்தவர்கள் இவ எவன்கூடயோ ஓடி போயிட்டா கல்யாணமே பண்ணிட்டு இருப்பா அப்படி இப்படின்னு பேசி அசிங்க படுத்தினார்கள். நான் என் வாழ்க்கையில் செய்த பெரிய தப்பு, இப்போது நினைத்தாலும் அசிங்கமாக இருக்கு என பேசியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US