விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிரபல சீரியல் நடிகை.. முக்கியமான கேரக்டராம்!
விஜய் சேதுபதி
மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மகாராஜா மற்றும் விடுதலை 2 ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.
நடிப்பை தாண்டி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக வலம் வந்தார் விஜய் சேதுபதி. நடிகனாக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர வேடங்கள் என பல முன்னணி நட்சத்திரங்கள் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, இவர் நடிப்பில் ஏஸ், டிரெயின் மற்றும் காந்தி டாக்கீஸ் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இப்படங்களை தொடர்ந்து, அடுத்து இயக்குநர் பாண்டிராஜுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார்.
சீரியல் நடிகை
இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் முதல் முறையாக இணைந்துள்ளனர். இவர்களுடன் யோகிபாபு, செம்பன் வினோத், ஜோஸ் இணைந்து லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தில் சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ரோஷினி ஹரிப்பிரியா லீட் கேரக்டர்களில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது.

உயிரிழந்த கன்றின் உடலை பார்த்து கண்ணீர் விட்ட பசு ..அடுத்து நடந்த சம்பவம் - பீதியில் மக்கள்! IBC Tamilnadu
