சீரியலில் ஹோம்லி லுக்கில் நடிக்கும் நடிகை ஜனனியா இது! மார்டன் லுக் புகைப்படங்கள்
ஜனனி அசோக்
சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜனனி அசோக். இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இதயம் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இதற்கு முன் நாம் இருவர் நமக்கு இருவர் 2, மாப்பிள்ளை, மௌன ராகம் உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள சின்னத்திரை கதாநாயகியாக இருக்கும் ஜனனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.
மார்டன் லுக் புகைப்படங்கள்
தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் அல்லது வெகேஷன் செல்லும் புகைப்படங்களை அதில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மார்டன் லுக்கில் எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சீரியலில் ஹோம்லி லுக்கில் நடித்து வரும் நடிகை ஜனனியா இது என கேட்டு வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..