நீண்ட இடைவேளைக்கு பிறகு சீரியலில் நடிக்கவரும் நடிகை ஜனனி- எந்த டிவி தொடர் தெரியுமா?
நடிகை ஜனனி
தமிழ் சினிமாவை விட சின்னத்திரை தான் இப்போது சூடு பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறது. அதாவது ரசிகர்களின் பெரிய வரவேற்போடு சின்னத்திரைக்கு நல்ல ரீச் கிடைக்கிறது.
இதனாலேயே தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள், நிகழ்ச்சி என புதிது புதியதாக வருகின்றன. சன் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து புத்தம் புதிய சீரியல்கள் வருகின்றன.
அப்படி விரைவில் ஜீ தமிழிலும் ஒரு சூப்பரான சீரியல் வரப்போகிறது. இந்த புதிய சீரியலின் நாயகன் யார் என்பது தெரியவில்லை, ஆனால் நாயகி யார் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது.
அவர் வேறுயாரும் இல்லை கடைசியாக விஜய் தொலைக்காட்சியில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்திருந்த ஜனனி தான் நாயகியாக நடிக்க இருக்கிறாராம்.
மற்றபடி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.