நல்ல வேளை.. பிக் பாஸ் வாய்ப்பை நிராகரித்த நடிகையின் பதிவு வைரல்
விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோ தொடங்கி 2 தினங்கள் மட்டுமே ஆகிறது. ஆனால் இப்போதே போட்டியாளர்களுக்கு நடுவில் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் வாக்குவாதங்கள் வர தொடங்கி இருக்கிறது. குறிப்பாக வாட்டர் மெலன் சுதாகர் பேசும் விதம் தான் பல சண்டைகளுக்கு காரணமாக அமைந்து இருக்கிறது.
வாட்டர் மெலன் சுதாகர், அகோரி கலையரசன் உள்ளிட்டோரை அதிகம் பேர் முதல் வாரத்தில் நாமினேட் செய்து இருக்கின்றனர்.
மேலும் இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வியூஸ் வாங்க மோசமான விஷயங்களை செய்தவர்களை தான் இந்த முறை போட்டியாளர்களாக அனுப்பி இருக்கிறார்கள் என்கிற விமர்சனமும் நெட்டிசன்கள் வைத்து வருகின்றனர்.
நல்ல வேளை நான் அதை மிதிக்கல
இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை ஜனனி "நல்ல வேளை நான் அதை மிதிக்கல" என இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.
அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக செல்ல இருப்பதாக கூறப்பட்டது, ஆனால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்தால் தப்பித்துவிட்டதாக மறைமுகமாக பதிவிட்டு இருக்கிறார்.

