இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை ஜெனிபரின் முதல் மகனை பார்த்துள்ளீர்களா?- இவ்வளவு பெரிய மகனா?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குடும்ப பாங்கான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. குடும்ப தலைவியின் போராட்டத்தை பற்றி விளக்கும் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இதில் ராதிகா என்ற வேடத்தில் முதலில் நடித்து வந்தவர் ஜெனிபர். இவர் கர்ப்பமாக இருப்பதால் திடீரென சீரியலில் இருந்து விலகினார். அவ்வப்போது புதிய உடைகள் அணிந்து எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்த வண்ணம் இருக்கிறார்.
அண்மையில் ஜெனிபருக்கு சீமந்த நிகழ்ச்சி நடந்துள்ளது, அந்த புகைப்படங்களையும் அவர் ஷேர் செய்துள்ளார்.
அந்நிகழ்ச்சியில் தனது கணவர், முதல் மகனுடன் எடுத்த புகைப்படத்தை அவர் ஷேர் செய்ய இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள்.