பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை காவ்யாவிற்கு அடுத்தடுத்து குவியும் வாய்ப்பு.. புதிய படம்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். முதல் பாகம் முடிவடைந்து அப்பா-மகன்கள் கதைக்களத்துடன் 2ம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த முதல் பாகத்தில் ரசிகர்கள் மிகவும் ரசித்த கதாபாத்திரம் முல்லை, விஜே சித்ரா இந்த கதாபாத்திரத்திற்கு புதிய உயிர் கொடுத்து நடித்திருந்தார்.
ஆனால் அவர் இறக்க அந்த கதாபாத்திரத்தில் காவ்யா நடிக்க வந்தார், அவருக்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்தார்கள்.
புதிய படம்
பின் பாதியிலேயே தொடரில் இருந்து காவ்யாக விலகியிருந்தார். தற்போது அவர் அடுத்தடுத்து நிறைய படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இவர் 2022ல் மிரள் என்ற படத்தில் ஹேமா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், பின் 2023ம் ஆண்டு ரிப்பப்பரி என்ற படத்தில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.
இந்த 2 படங்களை தொடர்ந்து காவ்யா பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் நடிகை காவ்யா, பிரபல ஒளிப்பதிவாளரான நட்டி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக புதிய படம் நடித்துள்ளாராம்.