நீயெல்லாம் நாயகியா நடிக்க மாட்ட, நீயெல்லாம் Artistஆ.. அய்யனார் துணை நடிகை மதுமிதாவை விமர்சித்த இயக்குனர், யார் அது?
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் சூப்பராக ஓடும் ஹிட் தொடர்களில் ஒன்றாக உள்ளது அய்யனார் துணை.
எமோஷ்னல், கியூட் காதல், குடும்பம், பாசம், பிரச்சனை என எல்லாம் கலந்த கலவையாக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரில் நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்துவரும் மதுமிதாவிற்கு தொடர் மூலம் ரசிகர்கள் வட்டாரம் சேர்ந்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.
சமீபத்தில் நடந்த விஜய் டெலிவிஷன் விருதில் கூட இவருக்கு விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.
பேட்டி
அய்யனார் துணை சீரியல் மூலம் அதிகம் கொண்டாடப்படும் மதுமிதா ஆரம்ப கட்டத்தில் நிறைய கஷ்டங்களை சந்தித்துள்ளது அவரது பழைய பேட்டியின் மூலம் தெரிகிறது.
அவர் ஒரு பேட்டியில், ஒரு இயக்குனர் நான் அக்ரீமென்டே எழுதி கொடுக்கிறேன், நீ நாயகியாக நடிக்க மாட்ட, நீயெல்லாம் ஆர்டிஸ்டே கிடையாது என விமர்சனம் செய்ததாக கூறியுள்ளார்.
ஆனால் அவர் அந்த இயக்குனர் யார் என்பதை கூறவில்லை, அவர் கூறியது பொய் என்பதை மட்டும் நிரூபித்து வருகிறார். எதிர்நீச்சல் சீரியல் மூலம் கவனத்தை பெற்றவர் இப்போது அய்யனார் துணை சீரியலிலும் நாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.