இஸ்ரேல் போரில் பரிதாபமாக உயிரிழந்த பிரபல சீரியல் நடிகையின் சகோதரி- எமோஷ்னல் வீடியோ
நடிகையின் வீடியோ
கடந்த வருடத்தில் இருந்து உலகத்தில் ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் போர் நடந்துகொண்டே இருக்கிறது. ரஷ்யா-உக்ரைன் போரை யாரும் மறக்கவே முடியாது.
இப்போது இஸ்ரேலில் ஹமாஸ் படை தாக்குதல் நடந்து வருகிறது, இதனால் பல லட்சம் பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.
இந்த போரில் பரிதாபமாக பிரபல சீரியல் நடிகையின் சகோதரி உயிரிழந்துள்ளார்.

பிரபல நடிகை
பாலிவுட் சினிமாவில் பிரபல ஹிட் சீரியலான நாகினி தொடரில் நடித்திருந்தவர் மதுரா நாயக்.
இவரது சகோதரி மற்றும் அவர் கணவர் இஸ்ரேலில் ஹமாஸ் படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், இந்த மனிதாபிமானமற்ற செயலுக்காக நான் வெட்கப்படுகிறேன்.
வன்முறையை எந்த வகையிலும் நான் ஆதரிக்க மாட்டேன்.
இந்த மோசமான நேரத்தில் நீங்கள் இஸ்ரேல் மக்கள் பக்கம் நில்லுங்கள், தீவிரவாதிகளின் கொடூரமான, மனிதாபிமானமற்ற முகத்தை மக்கள் பார்க்கிறார்கள் என எமோஷ்னல் வீடியோ வெளியிட்டுள்ளார்.
