புதிய தொழிலை தொடங்கியுள்ள சீரியல் நடிகை மகாலட்சுமி... என்ன பிசினஸ், வீடியோ இதோ
மகாலட்சுமி
தொகுப்பாளினியாக பயணத்தை துவங்கி பின் நடிக்க வந்த பிரபலங்கள் பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் மகாலட்சுமி.
சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியல் மூலம் தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கியவர் தான் மகாலட்சுமி. அவரது முதல் தொடரே பெரிய ரீச் கொடுக்க அடுத்தடுத்து செல்லமே, முந்தானை முச்சு, இரு மலர்கள், அவள் என பல சீரியல்கள் நடித்து வந்தார்.

தொடர்ந்து மகாலட்சுமி பல சீரியல்கள் நடித்து வந்தாலும் அவர் சொந்த விஷயம் மூலம் தான் மக்களிடம் அதிகம் பிரபலமானார்.
மகாலட்சுமி முதலில் அனில் என்பவரை திருமணம் செய்து ஒரு மகனும் பெற்றார், பின் இருவரும் பிரிந்தார்கள்.
அதன்பிறகு சீரியல் நடிகருடன் கிசுகிசுவில் சிக்கிய மகாலட்சுமி பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரனை மறுமணம் செய்து எல்லோருக்குமே ஷாக் கொடுத்தார் என்றே கூறலாம்.

புதிய தொழில்
கணவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிடுவது, சீரியல் நடிப்பது, போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக இருக்கும் மகாலட்சுமி இப்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார்.

அதாவது Grandma's Magic என்ற பெயரில் ஊறுகாய் வியாபாரம் தொடங்கியுள்ளார். அந்த வீடியோக்களை அவரே தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார், ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.